மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவருமான திருநாவுக்கரசு தலைமையில் மத்திய மோடி அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து எலவனாசூர்கோட்டையில் உளுந்தூர்பேட்டை சேர்மன் ராஜவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் செங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களிலும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் உரிமைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜய்காந்த் தமிழக குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக