தூத்துக்குடி - போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

தூத்துக்குடி - போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு.

தூத்துக்குடியில் 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு.

தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, நேற்று (15.03.2025) அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூடையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மேற்படி போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad