பழனியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரிடம் சிக்கி உள்ளான்!
திண்டுக்கல்,பழனி புறநகர்,சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதுகுறித்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை நேற்று 8:3:25 கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள், 10 கேஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக