கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை :

IMG-20250320-WA0412


ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அருகேயுள்ள கடைகளில், பீடி, சிகரெட் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுந்தரா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சியில் அந்தந்த மண்டலங்களைச் சேர்ந்த சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் நேற்று முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, பள்ளி கல்லூரி அமைந்துள்ள 100 மீட்டர் தூரத்திற்குள் புகையிலை, சிகரெட் விற்க கூடாது என்று அறிவுறுத்தினர். அங்கிருந்த சிகரெட் விளம்பர அட்டைகளை அப்புறப்படுத்தினர். மேலும், பிராண்ட் இல்லாத தின்பண்டங்களை வாங்கி விற்க வேண்டாம் என்றும் போதை ஏற்படுத்தக்கூடிய சாக்லேட்களை விற்க கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad