நீர்வளத் துறை மானிய அறிவிப்பில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு பணிகள்!
குடியாத்தம் , மார்ச் 24-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குடியாத்தம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாழையாத்தம் முதல் பெரும்பாடி கூட்ரோடு வரை கவுண்டன்யா மகாநதி ஆற்றின்கரையில் சாலையும் கெங்கையம்மன் கோவில் தரைபாலம் மற்றும் சுண்ணாம்பேட்டை முதல் பெருமாள் நகர் சாலை வரை சிறு பாலம் அமைக்கப்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்தது. முற்றிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செதுக்கரை பச்சையம்மன் கோயில் முதல் பெருமாள் நகர் வரை புதிய சாலை அமைத்து தாழையாத்தம் முதல் பெரும்பாடி வரையிலான சாலையை இணைக்க வேண்டும் மற்றும் பேரணாம்பட்டு நகரம்,பாலூர் தேவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அளித்தேன்,
நீர்வளத்துறை துரைமுருகன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பாக குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும்பாடி சாலை முதல் தாழையாத்தம் வரை உள்ள சாலையினை நீட்டிப்பு செய்து தாழையாத்த முதல் பச்சையம்மன் கோயில் வரை கவுண்டமணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேவலாபுரம் கிராமம் முதல் மாளிகை தோப்பு கிராமம்வரை பாலாற்றின் இரு கரையிலும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்கு 9 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகளும்,பேர்ணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமம் அருகே மலட்டாற்றின் குறுக்கே 9 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில்தரைப்பாலமும்,பேர்ணாம்பட்டு நகரும் ஆயக்காரர் தெருவின் அருகே காட்டாட்றின் குறுக்கு ஒரு கோடி 60லட்சம் மற்றும் மதிப்பீட்டில் தரைப்பாலமும் சாத்கர் கிராமம் அருகே காட்டாட்றின் குறுக்கே ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலமும் மற்றும் மோர்தானா அணையின் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.குடியாத்தம் தொகுதி மக்களின் சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கும் மாவட்ட கழக செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்களுக்கும் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் அவர்களுக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மகளிர் அணி மாநில பிரச்சார குழு செயலாளர் வி.அமலு விஜயன் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக