முதுகுளத்தூரில் ஈத் (பெருநாள்) தொழுகை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

முதுகுளத்தூரில் ஈத் (பெருநாள்) தொழுகை

 

IMG-20250331-WA0246

முதுகுளத்தூரில் ஈத் (பெருநாள்) தொழுகை


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

உலக முஸ்லிம்கள் ஒரு மாத காலம் புனித ரமலானில் நோன்பு நோற்று, அதன் பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்பு பெருநாள் ஆகும்.

இறைவன் நமக்கு அளித்த பாக்கியங்களுக்கு நன்றி பாராட்டும் நன்னாள்தான் பெருநாள். அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஆனந்தமாகக் கொண்டாடும் ஆனந்தத் திருநாள் தான் ரம்ஜான் பெருநாள். இதனை கொண்டாடும் வகையில்

 முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் சார்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது ஈத் (பெருநாள்) தொழுகையை திடல் (ஈத்கா) மைதானத்தில் சிறப்பாக நிறைவேற்றினர்,மேலும் தொழுகை நிறைவுற்றவுடன் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் உலக முஸ்லிம்களுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad