பெரிய மாரியம்மன் கோயில் விழா பூச்சாட்டுடன் தொடக்கம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

பெரிய மாரியம்மன் கோயில் விழா பூச்சாட்டுடன் தொடக்கம்

IMG-20250320-WA0442


ஈரோட்டில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் குண்டம், தேர்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்பு நேற்று முன்தினம் இரவே வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூச்சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 22-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு கம்பம் நடப்படுகிறது. 27-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

IMG-20250320-WA0410


ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 5.30

மணிக்கு வாய்க்கால் மாரியம்மன்

கோவிலில் குண்டம் திருவிழா

நடக்கிறது. காப்பு கட்டி விரதம்

இருக்கும் பக்தர்கள் குண்டம்

இறங்குகிறார்கள். 2ம் தேதி காலை

9 மணிக்கு பொங்கல் விழாவும்

தொடர்ந்து சின்ன மாரியம்மன்

கோவிலில் இருந்து தேரோட்டமும்

நடக்கிறது. 5-ந் தேதி பிற்பகல் 3

மணிக்கு கம்பங்கள் பிடுங்கப்பட்டு,

ஈரோடு மாநகரில் ஊர்வலமாக

எடுத்துவரப்படும். மஞ்சள் நீராட்டு

விழா நடக்கிறது. 6-ந் தேதி காலை

10.30 மணிக்கு மறுபூஜையுடன்

திருவிழா நிறைவடைகிறது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad