நெமிலி - புனித இரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு பெ. வடிவேலு பங்கேற்ற பேரன்பின் பெருவிழா!
ராணப்பேட்டை ,மார்ச் 31 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூர் தி.மு.க சார்பில் பேரூர் செயலாளர். என்.ஆர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய மக்களின் உரிமைகளையும், நலன் களையும் நிலைநாட்ட எந்த நிலையிலும் உறுதியோடு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்கள் துணை நிற்பார் என்று தெரிவித்து, அனைத்துஇஸ்லாமிய நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர்.கவிதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப் பாளர். சரவணன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், சாரதி, கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகி கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக