பத்திரிகையாளரை தாக்கிய இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவரின் கணவர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 மார்ச், 2025

பத்திரிகையாளரை தாக்கிய இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவரின் கணவர்.

பத்திரிகையாளரை தாக்கிய இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவரின் கணவர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊரில் மிகுந்த குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. 

இன்று மனுவை விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளர் பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சனை பற்றிய குறைகளை கேட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த இருக்கன்துறை ஊராட்சி தலைவியின் கணவர் முருகேசன் என்பவர் வருவாய் ஆய்வாளரின் முன்னிலையில் குடிநீர் பற்றாக்குறை பற்றி முறையிட்ட பொதுமக்களிடம் வாய்தகராறில் ஈடுபட்டார். 

சமாதானப்படுத்த முயற்சி செய்த பத்திரிக்கை நிரூபரை பொதுமக்கள் மற்றும் வருவாய் ஆய்வாளரின் முன்னிலையில் தாக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad