வேலை செய்த பணத்தை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் வீட்டின் உரிமையாளர் மீது புகார் மனு!
திருப்பத்தூர் , மார்ச் 24 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டம்பள்ளி தாலுகா நந்தி பண்டா பகுதியில் அல்லி முத்து என்பவர் தனது வீட்டில் உள்ள புதிதாக அமைக்கப்பட உள்ள கூரை வேலைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத் தைச் சேர்ந்த அருள் என்பவர் கூலிக்காக அழைத்துச் சென்றுள்ளார் இதில் அவர் பேசியபடி பாதி தொகையை கொடுத்து அல்லி முத்து மீதமுள்ள தொகையான ரூபாய் 2 லட்சத்து 22 ஆயிரம் தொகைய ஆறு மாத காலமாகியும் இன்று வரை அவரின் பாக்கி பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார் இதனால் பெரும் மலர் உளைச்சலுக்கு ஆன அருள் என்பவர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்,
ஆனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் இன்று வரை அவரின் புகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர் இதனால் சம்பந்தப்பட்ட அருள் என்பவர் புத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் அதில் அவருக்கு இன்று திங்கள்கிழமை உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அறிக்கை கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது ஆனால் அங்கு சென்று கேட்ட அவரை ஆய்வாளர் மங்கையர்க்கரசி அவர்கள் அநாகரிமாக பேசியதாகவும் தனக்கு சேர வேண்டிய அந்த பணத்தை அல்லி முத்து விடமிருந்து பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட நபர் பேட்டி அளித்துள்ளார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மே. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக