உலக தண்ணீர் தினம் - பேச்சுப்போட்டி* - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

உலக தண்ணீர் தினம் - பேச்சுப்போட்டி*

IMG-20250325-WA0374


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் *உலக தண்ணீர்* தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக *குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின்* சார்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப்போட்டி நடைபெற்றது. 


விழாவுக்கு பள்ளி *தலைமை ஆசிரியை கௌசல்யாமணி* தலைமை வகித்தார்.  *ஆசிரியர் கார்த்திகேயனி* அனைவரையும் வரவேற்று பேசினார்.  

IMG-20250325-WA0378


பள்ளி மாணவ மாணவிகள்  ஆர்வத்துடன் பேச்சு போட்டியில் பங்கேற்று  *தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் சேமிப்பு* பற்றி பேசி தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். *சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர்  குணசேகரன்* கலந்து கொண்டு போட்டிகளில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.

IMG-20250325-WA0376


நிகழ்வில் *எக்ஸல் பொறியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின்  ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தளிர்விடும் பாரதம் சார்பில் சரண்யாபிரபு,  பாலாஜி* மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

IMG-20250325-WA0377


நிறைவாக பள்ளி *ஆசிரியை ஜாஸ்மின் ஸ்டார் லெட்* அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad