ஏரல், மார்ச் 23. நவதிருப்பதிகளில் 5 வது திருப்பதியான இரட்டைத் திருப்பதி அருகில் சுவாமி நம்மாழ்வார் பிறந்த அப்பன் கோவில் உள்ளது.
அங்கு இன்று புதிய கருட வாகனத்தில் கருடசேவை நடந்தது. அப்பன் கோவில் சுவாமி திருவேங்கடத்தப்பன் கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று முடிவுறும் வகையில் 5 நாட்கள் உற்சவம் நடக்கிறது.
அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் 7.15 மணிக்கு திருமஞ்சனம் 8.30 மணிக்கு தீபாராதனை. 10 மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயார் ஸ்ரீ தேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாணம் நடந்தது.
திருமாங்கல்ய தாரணம் முடிந்தவுடன் தீர்த்தம். மஞ்சள் கயிறு. குங்குமம். மற்றும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் புதிய கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து. மாட வீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அரையர் ஸ்வாமிகள் சம்பத். சாரங்கன். ஆழ்வார்திருநகரி அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜன் என்ற கணேசன் உறுப்பினர்கள் கிரி. காளிமுத்து. ராமலட்சுமி. செந்தில்.ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி கண்ணன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக