சாலையில் தவறி விட்ட பணம் பை காவல்துறையிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனர்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 30 மார்ச், 2025

சாலையில் தவறி விட்ட பணம் பை காவல்துறையிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனர்!

சாலையில் தவறி விட்ட பணம் பை காவல்துறையிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனர்!
குடியாத்தம் , மார்ச் 30 -

சாலையில் தவறிவிட்ட ஹேண்ட் பேக், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன் உள்ளிட்டவற்றை காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைத்த  வேன் ஓட்டுனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் மினி வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிக்றார் இதனிடையே அவர் தனது இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது சாலையில் ஒரு  ஹேண்ட் பேக் ஒன்று  இருந்துள்ளது இதனை யடுத்து அதை எடுத்துப் பார்த்தபோது அதில் பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் மற்றும் சில மருந்து மாத்தி ரைகள் இருந்துள்ளது இதனையடுத்து ஹேண்ட்பேக் உடன் குடியாத்தம் நகர காவல் நிலையம் சென்ற அன்பழகன் அங்கு காவலர்களிடம் அந்த ஹேண்ட் பேக்கை ஒப்படைத்தார் இதனையடுத்து அதிலிருந்து செல்போனை வைத்து பையை தவறி விட்டுச் சென்ற காட்பாடி பகுதியில் சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் சரத்குமார் என்பவரை தொடர்பு கொண்டனர், இதனையடுத்து அவர் உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு வந்தார் அங்கு வேன் ஓட்டுனர் அன்பழகனிடமிருந்து ஹேண்ட் பேக் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் செல் போன் ஆகியவற்றை சரத்குமாரிடம் ஒப்படைத்தனர, சாலையில் கிடந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வேன் ஓட்டுனரின் நேர்மையை காவல்துறை யினர் வெகுவாக பாராட்டினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad