இருக்கன்துறை - தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

இருக்கன்துறை - தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

இருக்கன்துறை - தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, புதுமனை ஊர் விலக்கில் ஹோட்டல் தொழில் நடத்தி வருபவர் சந்திரன் ஆவார் . புதுமனை வடக்கூரில் வாழ்ந்து வருபவரான சந்திரன் என்பவர் மூன்று நாட்களுக்கு முன்னர் இருக்கன்துறை அனுமன் நதியின் அருகிலுள்ள சுயம்பு நாடார் ஏற்பவரின் விவசாய தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற தோட்டத்தின் உரிமையாளரான சுயம்பு நாடார் சந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தூக்கிட்டு கொண்டு மூன்று நாட்களுக்கு மேலானதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. 

உடனே அவர் பழவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், தலையாரி போன்றோர் அவரது உடலை கைப்பற்றி உடனே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு பிணக்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் புதுமனை வடக்கூரை சேர்ந்த சந்திரன் என்பவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad