வேலூர் ,மார்ச் 26 -
வேலூர் அடுக்கம்பாறை ஶ்ரீ வெங்க டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் முதலுதவி சிகிச்சை பற்றிய சிறப்பு வகுப்புகள் காட்பாடி வட்ட இந்திய ரெட்கிராஸ் சங்கத் தின் சார்பில் நடைபெற்றது.காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி யாளர் முதலுதவி பயிற்சி முகாம் அமைப் பாளர் செ.நா.ஜனார்த்தனன், டாக்டர் வீ.தீனபந்து, ஆகியோர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர் இந்த பயிற்சி முகாமிற்கு ஊரட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ் துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியேர் துவக்கி வைத்தனர் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எ.குமரரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் எம்.ஞான சேகரன், வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதயாளர் ஓய்வு டி.சுந்தர பாண்டியன், மெக்கானிகல் துறையின் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது மேலும் மனித பிழைகளால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் இயக்கை பேரிடர்கள் என பேரிடர் இரண்டு வகைப்படும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து முனைவர் செ.நா.ஜனார்த்தனன் விளக்கம் அளித்தார். மேலும் யோகா, யோகா செய்வதன் பலன்கள் குறித்து செயல் விளக்கத்தினை ஓய்வு பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) டி.சுந்தரபாண்டியன் அளித்தார்.முடிவில் மாணவன் பி.நரேஷ்குமார் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக