இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கும்பகோணம் கிளைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), கும்பகோணம் கிளை (SIRC), 2025-2026 ஆம் ஆண்டுக்கான அலுவலகப் பொறுப்பாளர்களுக்கான பாராட்டு விழாவையும், வங்கி தணிக்கை குறித்த CPE கருத்தரங்கம் ஹோட்டல் ஆர் ஏ எஸ் ரெசிடென்சியில் சிறப்பாக. நடைபெற்றது
இக்கருத்தரங்கில் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஆடிட்டர்
பி. ராஜேந்திர குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக
பிராந்திய கவுன்சில் உறுப்பினர் ஆடிட்டர் ஏ வி அருண் கலந்து கொண்டு கௌரவித்தார்.
தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ஆடிட்டர் ஜி கணேஷ், அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கீழ்கண்ட புதிய அலுவலகப் பொறுப்பாளர்கள்தலைவர் ஆடிட்டர் ஜி கணேஷ், துணைத் தலைவர் ஆடிட்டர் ஹச் விஜய் சாரதி, செயலாளர் ஆடிட்டர் எம் எஸ் கே பிரசன்ன குமார்,பொருளாளர் ஆடிட்டர் ஆர் வெங்கடேஷ், மற்றும் SICASA தலைவர்: ஆடிட்டர் வி ஏ சித்தரசன்,உறுப்பினர் ஆடிட்டர் விவேக் மனோகர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
முன்னதாக முன்னாள் தலைவர் ஆடிட்டர் வி.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் செயலாளர் ஆடிட்டர் எம்.எஸ்.கே பிரசன்ன குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக