ஈரோடு, கருங்கல்பாளையம், வண்டியூரான் கோயில் வீதியை சேர்ந்தவர் மணியம்மா (55).
இவரது கணவர் பொன்னுசாமி (60). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மணியம்மாவும், பொன்னுசாமியும் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர்.
மணியம்மா பல்வேறு உடல் உபாதைகளால் கருங்கல்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். அதனால் பொன்னுசாமி, தனது மனைவியை தன்னுடன் தோட்ட வேலைக்கு வரவேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால், மணியம்மா அதை கேட்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம்
(மார்ச் 24) பொன்னுசாமி மனைவியிடம் சத்தம் போட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மணியம்மா, பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அதுகுறித்து, மணியம்மா தனது கணவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டுக்கு வந்த பொன்னுசாமியும், அவரது 3-வது மகனும் மணியம்மாவை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணியம்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பொன்னுசாமி நேற்று அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக