உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு புதிய கட்டிடம் கட்டுமான பணி பூமி பூஜை நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் பகுதியில் அமைந்துள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டிடம் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது இதற்கான கட்டுமான பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம் உளுந்தூர்பேட்டை சார்பில் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் உளுந்தூர்பேட்டை கூடுதல் அரசு வழக்கறிஞர் இளமுருகன் மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக