ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பொன்னம் பலம் கிராமத்தில் பழங்குடியினரான நீலாவதியின் குடும்பத்தில் பேரன், மருமகள் பேரக்குழந்தைகள் உட்பட 8 பேர் ஓலை குடியில் வசித்து வருகின்றனர்.
கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக குடிசை வீடு தீ பிடித்து எரிந்து சேதமானது.
இதில் பாதிப்படைந்த குடும்பத்துக்கு உதவும் வகையில் வேலூரில் இருந்து சுமார் 60கிலோ மீட்டர் பயணம் செய்து நேரில் ஆறுதல் கூறி நம்மால் முடிந்த ரூபாய் 5000 நிவாரணம் வழங்கினோம். மேலும் மூன்று பிள்ளைகளின் கல்வி செலவையும் கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக