நெமிலியில் பெ. வடிவேலு தலைமையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

நெமிலியில் பெ. வடிவேலு தலைமையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

நெமிலியில் பெ. வடிவேலு தலைமையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! 
ராணிப்பேட்டை , மார்ச் 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் நேற்று  நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜனார்த்தனன்,  மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு ஆயிரம் நபர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மஞ்சம்பாடி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெமிலி டவுன் பஞ். தலைவர் ரேணுகாதேவி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் முகமது அப்துல் ரகுமான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வடகண்டிகை பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா நெமிலி பஸ் ஸ்டாண்டில் கொண்டாடப்பட்டது.இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் நரசிம்மன் வரவேற்றார். அப்போது முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் 300 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதேபோல் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமையில் ரெட்டி வலம் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இதில் நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad