தீயாக பரவும் மாவட்ட ஆட்சியரின் கடிதம்.. உஷாராகும் மடத்துக்குளம் - உடுமலை தொகுதி மக்கள் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

தீயாக பரவும் மாவட்ட ஆட்சியரின் கடிதம்.. உஷாராகும் மடத்துக்குளம் - உடுமலை தொகுதி மக்கள்

IMG-20250308-WA0274

திண்டுக்கல் மாவட்டம் 7 தொகுதிகளை அடங்கிய பெரிய மாவட்டம் என்பதாலும் , திருப்பூர் மாவட்டம் 8 தொகுதிகளை அடங்கிய பெரிய மாவட்டம் என்பதாலும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து  ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இரண்டு தொகுதிகளை பிரித்தும் , திருப்பூர் மாவட்டத்திலிருந்து உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகளை பிரித்தும் பழனியை தலைமையிடமாக கொண்டு புதியதாக உருவாக்கப்படும் பழனி மாவட்டத்தில் இணைக்கப்படுவது உறுதி என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் , பழனி 

சார்ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம்  தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உடுமலை மடத்துக்குளம் பாதுகாப்பு சங்க பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகள் திமுகவி அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை பழனியுடன் இணைக்ககூடாது என போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad