மானாமதுரை அருகே பீசர்பட்டினத்தில் உள்ள தியான மடத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள பீசர்பட்டினத்தில் தியான மடம் செயல்பட்டு வருகிறது. இந்த தியான மடத்தில் ஹார்ட் ஃபுல்னெஸ் கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீராம் சந்த்ரா மிஷின் மலரும் மகளிர் இதயங்கள் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்ற மானாமதுரை அஞ்சல்துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் எஸ். தர்மாம்மாள் தலைமை ஏற்றார். ரேவதி மருத்துவமனை பாலம்மாள்ஸ்ரீ சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
சர்வதேச மகளிர் தினத்தை மூன்னிட்டு அஞ்சல்துறை தலைமை போஸ்ட் மாஸ்டர் மகளிர் தின விழா என்றால் என்ன, பெண் அதிகாரம் என்றால் என்ன, பெண்களுக்கான சம உரிமை, பெண்கள் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் மற்றும் பெண்களும் ஆண்களுக்கும் சம உரிமை உண்டு என எடுத்துரைத்தார்.
இம்மகளிர் தின விழாவில் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிகாட்டினர். மேலும் சிவகங்கை சீமை வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றின் சிறப்புகளை மாணவிகள் அரங்கத்தில் எடுத்துறைத்தனர். மாணவ மாணவிகளின் கலை, தியானம் மற்றும் நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏரளாமான முதியவர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், தியான பயிற்சி மேற்கொள்பவர்கள், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக