அஇஅதிமுக சார்பாக திமுக அரசிற்கு எதிராக துண்டுபிரசுரம் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை வலியுறுத்தி பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடாத, சட்டம் ஒழுங்கை பேணிக் காத்திடாத, திருட்டு கொலை சம்பவங்களை கட்டுப்படுத்திடாத, உணவுப் பொருட்களின் விலைவாசி, மின் கட்டணம், வீட்டு வரி, குப்பை வரி, தொழில் வரி, கள்ளச்சாராயம் மற்றும் கட்டுமான பொருட்களின் விலைவாசி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து இப்பிரச்சாரம் அதிமுக தொண்டர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக