புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 மார்ச், 2025

புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு!


வேலூர் , மார்ச் 15 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இன்று வேலூர் ஊரிசு கல்லூரி வளாகத்தில் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக் கின்றனர் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். 
தமிழ்நாட்டில் முதன்முறையாக புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு சய்து ஆய்வு கட்டுரைகளை பகிரும் மேடையாக ஆசிரியர் அறிவியல் மாநாடு நடத்துவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையின் அடிப்படையில் இப்படிப்பட்ட புதுமையான ஒரு முயற்சி யானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் ஊரிசுக் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டிற்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ. மணிமொழி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே எம் ஜோதிஸ்வர பிள்ளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வானவில் மன்ற வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.அம்பிகா வரவேற்று பேசினார்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தொகுப்புரை யாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பே.அமுதா ஊரிசு கல்லூரியின் முனைவர் ஆனி பிளாரன்ஸ்,  நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் கிளேப் நோபில் சந்தர் துணை முதல்வர் டி.சத்யபிரசாத்குமார் வானவில் மன்ற வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் பொருளாளர் வீரா.குமரன் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பழனிவேலு கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆர்.காயத்ரி வேலூர் கிளை செயலாளர் ப.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
120 ஆசிரிய ஆசிரியைகள் தங்களது அறிவியல் மற்றும் கணிதம் பாடதிலான ஆய்வு அறிக்கைகளை சமர்பித்து பேசினர். பேராசிரியர் முனைவர்.வித்யா தலைமையில் வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 3 கல்லூரிகளின் 27 பேராசிரியர்கள், இணை பேராசி ரியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு அறிக்கைகளை ஆய்வு செய்தனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad