அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் பஞ்சம் குடிநீருக்காக அலைமோதும் பள்ளிக் குழந்தைகள்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் பஞ்சம் குடிநீருக்காக அலைமோதும் பள்ளிக் குழந்தைகள்!

 அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் பஞ்சம் 
குடிநீருக்காக அலைமோதும் பள்ளிக் குழந்தைகள்!

காட்பாடி , மார்ச் 26

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் சுத்தமான குடிநீர் ஆர்.ஓ. இயந்திரம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த ஆர்.ஓ. இயந்திரம் பழுதடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சுத்தமான போதிய குடிநீர் வழங்காமல் இதைப் பற்றி பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு மிகுந்த குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் குடிநீருக்காக இங்கும் அங்கும் வெளியில் செல்லும் அவல நிலையும் அதிகரத்து வருகிறது. இப்பள்ளியின் அருகில் உள்ள சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தினமும் 20 லிட்டர் கொண்ட மினரல் வாட்டர் பாட்டில்கள் மூன்று அல்லது நான்கு குடிநீர் பாட்டில் கள் ஏற்பாடுகள் செய்து போதிய அளவு குடிநீரை மாணவர்களுக்கு திருப்திப் படுத்தும் வகையில் குடிநீர் வழங்கி வருகின்றனர். இப்போது மக்கள் பாராட்டிய வருகின்றனர். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோடை காலத் தில் குடிநீருக்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை பயன்படுத்தி உடனடியாக போதிய அளவு பள்ளி குழந்தைகளுக்கு குடிநீர் வழங்க உரிய ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிவிரைவில் உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad