பேராவூரணி தாசில்தாராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாசில்தார்கள், துணை தாசில்தார்களை பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பேராவூரணி தாசில்தாராக பணியாற்றி வந்த தெய்வானை பட்டுக்கோட்டை கோட்டா கலால் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராக இருந்த, சுப்பிரமணியன் பேராவூரணி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சுப்பிரமணியன் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை தாசில்தார்கள், ஆர்.ஐக்கள், வி.ஏ.ஓ, கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
படவிளக்கம் பேராவூரணி தாசில்தாராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்ட போது.
பேராவூரணி த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக