சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவான விளக்க உரை நிகழ்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவான விளக்க உரை நிகழ்வு

IMG-20250324-WA0058

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவான விளக்க உரை நிகழ்வு


கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவான விளக்க உரை நிகழ்வு 22.03.2025 அன்று நடைபெற்றது. 


எங்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் மடாலயக் கல்விக் குழுமத்தின் தாளாளர் மா. வீரப்பன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரெ. சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள சமக்ர ஷிக்ஷாவின்(Samagra Shikha) மாநில ஒருங்கிணைப்பாளரான s. சைமன் பீட்டர் பால் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவான விளக்க உரை ஆற்றினார். இதில் எவ்வாரு செயற்கை நுண்ணறிவை(AI) எளிமையாக கையாளலாம் என்பதை இந்நிகழ்வில் கலந்துகொண்ட கோவிலூர் மடாலயக் கல்விக் குழுமத்தின் அனைத்து ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு செய்முறைப் பயிற்சியின் மூலம் விரிவாக விவரிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்வி ஒருங்கிணைப்பாளர்  திருமதி ராஜேஸ்வரி கலந்துகொண்டு சிற்பித்தார். நிகழ்வின் முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கலா வரவேற்புரை  வழங்கினார். நிகழ்வின் நிறைவாக உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ரவீந்திரன் நன்றியுரை நல்கினார். நிகழ்வில் கோவிலூர் மடாலயக் கல்விக் குழுமத்தின் அனைத்து ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad