தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு!
காட்பாடி , மார்ச் 24 -
வேலூர் மாவட்டம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினத்தில் வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் உலக தண்ணீர் தினம் காந்திநகர் துளிர் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பே.அமுதா தலைமை தாங்கினார், முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன், மத்திய அரசின் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் பேசியதாவது.. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீர் என்பது உயிர் நீர் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.காயத்ரி, மாவட்ட இணை செயலாளர் என்.கோட்டீஸ்வரி, வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன் காட்பாடி கிளை செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், துளிர் பள்ளி தலைமையாசிரியர் த.கனகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.பழனி, ஆசிரியர்கள் சே.சித்ரா, வெ.பாரதி, சு.மலர்கொடி, ரா.தனலட்சுமி காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு குணசுந்தரி, மு.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தண்ணீர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆய்வறிக்கையினை மதன்மோகன் காந்தி., புகழேந்தி ஆகியோர் சமர்பித்து பேசினார்.துளிர் திறன் அறிவு தேர்வு சான்றிதழ்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக துளிர் திறனறிவு தேர்வில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மார்ச் 22, 2025 அன்று, உலக நீர் தினம் "பனிப்பாறை பாதுகாப்பு" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும், இது உயிர்கள் மற்றும் நீர் சுழற்சியை நிலைநிறுத்துவதில் பனிப்பாறைகளின் முக்கிய பங்கையும், காலநிலை மாற்றத்தையும் இந்த முக்கியமான நன்னீர் ஆதாரங்களில் அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோன்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருவதால் விவசாயிகளால், பழைய ஆழ்துளைக் கிணறுகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இதனால் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.உறுதிமொழி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினத்தில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம். என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக