குடியிருப்பு பகுதியில் நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு படுகாயம் உயிருக்கு போராடிய குரங்கை பொதுமக்கள் உதவியுடன் மீட்ட வனத்துறையினர்!
குடியாத்தம், மார்ச் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகணபதி நகர் பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் குறங்கு ஒன்று படுகாயம் அடைந்தது, இதனையடுத்து படுகாயம் அடைந்த குரங்கை மீட்ட அப்பகுதியினர் அதற்கு வாழைப்பழம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை கொடுத்தனர் மேலும் இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,
வனத்துறையினர் குரங்கு பிடிப்பவர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த குரங்கை மீட்டு கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றனர் ஆபத்தான நிலையில் குரங்குக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்,நாய்கள் கடித்து படுகாயம் அடைந்த குரங்கை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அதிக அளவில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக