உதகையில் வருகின்ற மே,மாதம் கோடை விழாவினை முன்னிட்டு 127, வது மலர்கள் கண்காட்சி விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற உள்ளது என்பதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களுக்கு நிகழ்ச்சியின் தேதிகளை அறிவித்தார்
உதகையில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி மற்றும் காய்கறிகள் போன்ற நிகழ்வுகள் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக நடைபெறுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டில் உதகையில் இந்த ஆண்டில் 127,வது மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி போன்ற மூன்று விதமாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்பதனை உதகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ஏற்பாட்டினை செய்து வருகின்றனர் இதனால் வரும் மே,மாதம் 16,ம் தேதி துவங்கி 21,ம் தேதி வரை 6,நாட்கள் நடைபெறும் என்பதனையும் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து உதகை மண்டலத்தின் மலர் மற்றும் காய்கறி கண்காட்சிகளை கண்டுகளிப்பார்கள் என்று அறிவித்தார் இதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியது மட்டுமல்லாது வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்படை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையானது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக