அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட சென்னிமலை ரோடு, டீசல் ஷெட் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் (எ) புறா சரவணன் (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக