எழுத்தாளர் நாறும்பூநாதன் உடலுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் நேரில் அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

எழுத்தாளர் நாறும்பூநாதன் உடலுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் நேரில் அஞ்சலி.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

அன்பிற்கினிய எழுத்தாளர் நாறும்புநாதன் அவர்களுடைய மறைவு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது

நெல்லைச் சீமையின் நீண்ட நெடிய வரலாறு குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்டு, நெல்லை சீமையின் எழுத்தாளர்கள், கலைகள், இயற்கை வளம் என ஒவ்வொரு சிறப்பின் மீதும் தீராத அன்பு கொண்டு அதன் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேட்கையோடு தொடர்ந்து செயல்பட்டு வந்தவரின் மறைவு ஒரு பேரிழப்பு. 

"அன்பாடும் முன்றில்" மாணவர் தலைமைத்துவ மேம்பாட்டு திட்டத்தில் சீரிய பங்காற்றி வந்தவர். இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பயிலரங்கங்களை நடத்திட பெரும்பங்காற்றியவர். 

நாங்குநேரி தம்பி சின்னத்துரை மீண்டெழுந்து வந்து 12 ஆம் வகுப்பில் தேர்வில் சாதனை படைக்க தொடர்ந்து உறுதுணையாக இருந்து ஊக்குவித்தவர். அவர் மேலும் உயர்வு பெற வேண்டும் என்று தொடர்ந்து ஊக்குவித்து வந்தவர். பொருநை புத்தகத் திருவிழா, இலக்கியத் திருவிழா என அனைத்திலும் மிகுந்த ஈடுபாட்டோடு முன்னெடுத்துச் சென்றவர்.

அடுத்த திருவிழாவில், இந்த ஆண்டு பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களின் எழுத்துக்களையும் கவிதைகளையும் புத்தகங்களாய் வெளியிட வேண்டும், நெல்லையின் ஐந்திணை பெருமைகளை ஆவணப்படுத்திட வேண்டும் என்ற முனைப்போடு இருந்தவரை காலம் மீளாப் பயணத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

திருநெல்வேலியின் நீரும் நிலமும் மனிதர்களும் என்றும் அவர் பெயரை கூறிக் கொண்டே இருப்போம்!! என்று அவர் இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தார் இன்று அவரின் உடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad