அதள பாதாளத்தில் நீலகிரி பூண்டு விலை விவசாயிகள் கவலை.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மலைப் பூண்டு என அழைக்கப்படுகிறது மருத்துவகுணம் கொண்டதால் மேட்டுப்பாளையம் பூண்டு மண்டியில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு நீலகிரி பூண்டை ஏலத்தில் எடுப்பார்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு ரூபாய் 350 முதல் ஏலம்போனது ஒரு கிலோ நீலகிரி பூண்டு ரூபாய் 1000 ஏலம் போய் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்த போகத்தில் விதைப்பூண்டை ரூபாய் 800 மற்றும் 1000 விலைகொடுத்து அதிகப்படியான விவசாயிகள் பூண்டு விளைவித்ததால் மகசூல் அதிகரித்து விலை படிப்படியாக குறைய ஆரம்பித்து ரூபாய் 100 க்கும் கீழ் சென்றது ரூபாய் 40 க்கு ஏலம் போனதால் விவசாயிகள் அதிக கவலையடைந்தனர். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உதகை உழவர் சந்தையில் ரூபாய் 80 என விலை நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் விற்கவில்லை இதனால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக