தாராபுரம் பஸ்நிலையம் முன்பு ஒரு வழிப்பாதையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவுரை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

தாராபுரம் பஸ்நிலையம் முன்பு ஒரு வழிப்பாதையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவுரை

IMG-20250326-WA0089

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். அவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தாராபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜினி தலைமையில் போக்குவரத்து போலீசார் பஸ்நிலையம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு வழி பாதையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வருவதை தடுக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.


மேலும் தாராபுரம் பஸ் நிலையத்திலிருந்து உடுமலை ரோடு ரவுண்டானாவரை சாலையில் இடைவெளி இல்லாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். தாராபுரம் நகர் பகுதியில் இருந்து உடுமலை சாலை வழியாக பஸ் நிலையத்திற்கு வர ஒரு கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவழிப்பாதையில் பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இருசக்கர வாகனத்தை ஒருவழிப்பாதையில் ஓட்டக்கூடாது, தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad