சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம கமிட்டி அமைத்தது தொடர்பான நகர, வட்டார மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் நிதி அமைச்சர்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கிராம கமிட்டி அமைத்தது தொடர்பாக நகர் தலைவர்கள், வட்டார தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்டோரின் கலந்தாய்வு மற்றும் சந்திப்பு கூட்டத்திற்கு மாண்புமிகு முன்னால் நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு எஸ். பி. புருஷோத்தமன், கிழக்கு வட்டாரத் தலைவர் காசி ராமலிங்கம் மற்றும் மேற்கு வட்டாரத் தலைவர் பாண்டி வேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து திருப்புவனத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடராஜன், திருப்புவனம் கிழக்கு பொறுப்பாளர் லிங்கேஸ்வரன், திருப்புவனம் வடக்கு வட்டார தலைவர் மாரிமுத்து, திருப்புவனம் மேற்கு வட்டாரத் தலைவர் பாட்டன் சிவா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திலும் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு கந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் து. ஜா. பால்நல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், கிராம கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் மயிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக