இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாட்டில் 7 ஐ. பி. எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜி. ஜவகர், தற்போது சி. பி. சி. ஐ. டி. வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திருப்பூர் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளராக பணியாற்றி வந்த ஏ. சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஈரோடு மாவட்டத்துக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக