திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அதிமுக சார்பில் ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அதிமுக நகர கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு பிராத்தனையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக, மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் அதிமுக நிர்வாகிகள் நகர மகளிர் அணி செயலாளர் கௌரிசித்ரா முருகேசன் அவர்கள் , மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அரசகுமாரன் அவர்கள், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்கு மகேஷ் குமார் அவர்கள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பழனி குமார் அவர்கள், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திலீப் சீனிவாசன் அவர்கள், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள், நகர சிறுபான்மையர் பிரிவு செயலாளர் சபியுல்லா அவர்கள் , நகர சிறுபான்மையர் பிரிவு தலைவர பழக்கடை ஷரீஃப் , ஆறாவது வார்டு செயலாளர் துல்பகார் அலி அவர்கள்,
நகர கழக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள்
மாவட்ட கழக நிர்வாகிகள்,நகரக் கழக ஒன்றிய கழக, பேரூர் கழக - நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட,நகர, ஒன்றிய செயலாளர்கள்- நிர்வாகிகள், வார்டு கழக , கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் , வீராங்கனைகள் மற்றும் கழகத் தொண்டர்கள் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக