பண்ணாரி அம்மன் கோவில்களில் தற்காலிக கடை அமைப்பதற்கு 3 மடங்கு அதிகமாக வாடகை கட்டணம் கேட்பதாக புகார் வியாபாரிகள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: - கடந்த 40 ஆண்டுகளாக பண்ணாரி அம்மன் குண்டம் இறங்கும் திருவிழா நாட்களில் கோவில்களில் உப்பு, பொரி, கற்பூரம், மாங்காய், பானிபூரி உள்ளிட்டவைகளை தற்காலிகமாக கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்நிலையில் இந்தாண்டு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இங்கு 40 ஆண்டுகளாக தற்காலிக கடைகள் அமைத்து வந்த நிலையில் தற்போது கோவிலின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கிடையாது என டெண்டர் எடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தாண்டு மூன்று மடங்கு கடைக்கு வாடகை அதிகமாக கேட்கின்றனர். இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு வழக்கம்போல அதே பகுதிகளில் கடைகள் அமைக்க அனுமதி அளிப்பதோடு கடைகள் அமைக்க வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக