நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் கூடலூர் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு கூடலூர் ராமகிருஷ்ணா முதியோர் இல்ல வளாகத்தில் இன்று நடைபெற்றது கூடலூர் பகுதியில் இருந்து சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட வன அலுவலர் திரு வெங்கடேஷ் பிரபு கலந்து கொண்டார்
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அனைவரையும் வரவேற்றார். ரமலான் நோன்பின் சிறப்புகளை ப்ளூ ஹில்ஸ் அறக்கட்டளை நிர்வாகி அம்சா அவர்கள் விளக்கினார். கூடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் திரு லாரன்ஸ் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி ஹேமலதா அவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்விற்கான உணவு பொருட்களை வழங்கி துவக்கி வைத்தனர்.
ராமகிருஷ்ண முதியோர் இல்லம் திருமதி வசந்தகுமாரி அவர்கள் ரமலான் நிகழ்வின் வாழ்த்துரை வழங்கினார்
நிகழ்வின் நிறைவில் மாவட்ட செயலாளர் திரு வினோத்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக