குடியாத்தம் , மார்ச் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் P. சௌந்தரராஜன் அவர்கள் பெண்கள் இக்கால கட்டத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என அனைத்து மகளிருக்கும் மகளிர் தினம் வாழ்த்து கூறினார் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் s. கேத்ரின் மேரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பெண்கள் சாதனை படைப்பவர்களாக முன்வரவேண்டும் என்று கூறி,மகளிர் தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் மேலும் பிரேமா குமாரி மற்றும் வனிதா தலைமை காவலர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் k தங்கராஜ் மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.அத்தி கல்விக் குழுமத்தின் மருத்துவர்கள், பேராசிரியர்கள்,செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் சேர்ந்து உலக மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக