திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமமான நடுவகோட்டையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு பட்ஜெட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்த ஸ்டாலின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட்.என்று ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் ஆன ஆர் பி உதயகுமார் தலைமையில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமமான நடுவக்கோட்டை கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி விட்டது இந்த அரசு மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்ற மற்றொரு வாக்குறுதியை அழித்துவிட்டு இன்றுவரை அமைதி காப்பது ஏன்? கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக அதிக ரிப்பதாகவும் ஊதிய உயர்வு வழங்குவதாகவும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தகுதி உள்ளது இந்த அரசு. இப்படி பல எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை சட்டமன்றத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்து கேள்வி கேட்டால் நீங்கள் இருக்கையில் அமருங்கள் எதுவும் பேச வேண்டாம் என்று எங்களை கூறுகின்றனர். என்று ஆர் பி உதயகுமார் உரையாற்றினார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக அதிமுக வெற்றி பெற வைக்க வேண்டும் இதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று திண்ணை பிரச்சாரத்தில் எடுத்துரைத்தார். இந்த திண்ணை பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக