மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா.

மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா.

நாசரேத், மார்ச் 19, தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மன்றத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேர்வில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். 

அதில் மாணவர் பாலச்சந்திரன் முதலிடத்தையும், மாணவர்கள் மகாராஜா, அகஸ்டின் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. 

தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், ஆசிரியர்கள் ஆபிரகாம் இமானுவேல், எட்வின், வின்ஸ்டன் ஜோஸ்வா, அம்புரோஸ் சுகிர்தராஜ், ஆசிரியைகள் செல்வம் மற்றும் ரூபி பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad