குடியாத்தம் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

குடியாத்தம் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் !



குடியாத்தம் , மார்ச் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் சார்பில் முதலுதவி பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கல்லூரியில் முதல்வர் முனைவர்.சி. தண்டபாணி தலைமை தாங்கினார்.  கமேலாண்மை அறங்காவலர் பாலசுப்பிரமணியம், தலைவர் சுந்தரவதனம், செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் முததுக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் முதலுதவி பயிற்சியாளர் க. குணசேகரன் ஆகியோர் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.  கருத்தரங்கில் செயல்விளக்கம் அளித்த முனைவர் செ.நா.ஜனார்த்தனன், க.குணசேகரன், வீ.குமரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் வி குமரன் வாழ்த்தி பேசினார்.   கல்லூரியின் புல முதன்மையல் மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ரகுவர்மன் வரவேற்ற பேசினார். முடிவில் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad