திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் ஊராட்சி, அழகுசிறை, மேலநேந்தல் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.130விவசாயிகளிடம் இருந்து 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.680மெட்ரிக் டன் வரை பக்கத்து கிராமங்களுக்கு விற்பனை செய்ய பட்டு வருகிறது.மேலும் மழை காலத்தில் நெல் மூட்டைகளை பராமரிப்பு செய்வதற்கு தகுந்த தார்பாய்கள் மூடுவதற்கு புதிதாக தரவேண்டும்.அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வுசெய்து தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். புதிதாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக