தூத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாடு துளசி கல்வி குழுமம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய 'போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு பேரணியை (13.03.2025) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் துளசி கல்விக் குழுமம் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் உட்பட காவல்துறையினர் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு செயலாளர் ஆ. சங்கர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக