கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தின சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், கல்லூரி நிர்வாகம் ஆகியன இணைந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுபாஷிணி தலைமை தாங்கினார்.
கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் வீராசாமி முன்னிலை வகித்தார்.
கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் / உதவி பேராசிரியர் மகேஷ்வரன் வரவேற்றார்.
தரமான தேயிலை குறித்து தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி பேசும்போது தேயிலை உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது அதுபோல தேயிலை பயன்பாட்டில் முதல் இடம் பெற்றுள்ளது. தேயிலை தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 4 வது இடம் பெற்றுள்ளது தேயிலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் உடலில் தேங்கும் தேவையற்றவைகளை குறைக்கும் தன்மை உடையது அதுபோல தேயிலையில் உள்ள புளோரைடு பல்லுக்கு உறுதி தன்மையை அளிக்கிறது. இரும்பு சத்து குறைவாக எடுத்துக்கொள்ளும். பிளாக் டீ குடித்தால் நல்லது.
கலப்பட தேயிலை தூள் பயன்பாட்டினை தவிர்த்தால் தேயிலை மூலம் அதிக வருவாய் பெறமுடியும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பொருட்கள் வாங்கும் முன்னர் ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகள் கேட்டு அதிக பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து தர குறியீடுகளை பார்த்து தரமான பொருட்களை வாங்க வேண்டும். சுவை அதிகமாக உள்ள உணவுகள் என்ற பெயரில் உப்பு, கார, அமில தன்மை உடைய உணவுகள் எடுத்துக்கொள்வதால் உடலில் புற்றுநோய், மலட்டு தன்மை உள்ளிட்ட பலவேறு நோய்கள் ஏற்படுகிறது. தேவையற்ற, ஆடம்பர பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என்றார்.
கூடலூர் மின்சார வாரிய உதவி பொறியாளர் சந்தோஷ் பேசும்போது மின்சார சிக்கனம் மூலம் மின்சார சேமிப்பு மட்டுமின்றி மூலதன செலவினங்கள் குறையும். தரமான மின்சார உபயோக பொருட்கள் வாங்கி பயன்படுத்தி மின்சார பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சோலார் உள்ளிட்ட நிலையான மின் உற்பத்தி பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளவும் தயாராக வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி மகேந்திர பூபதி, என் ஐ ஐ டி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் அஜித்குமார், அஸ்வினி கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக