குடியாத்தம், மார்ச் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் - சித்தூர் செல்லும் சாலையில் பிச்சனூர் பேட்டையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் குறிப்பாக பிச்சனூர் பேட்டை பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் குடியாத்தம்- சித்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பிச்சனூர் பேட்டை பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வேகத்தடை அமைக்க கோரி பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியாத்தம் - சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக