தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின/ குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்து சண்டை போட்டி மயிலாடுதுறை மாவட்டம் ARC பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் திருப்பூர் DJ பாக்சிங் கிளப் சார்பாக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அதில் மாணவர்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட 63-66 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருப்பூர் avp trust NMHS பள்ளி மாணவர் ஆசிஃப் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் மாவட்டத்திற்கும் ஏவிபி பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இந்த நிகழ்வில் வெண்கல பதக்கம் வென்ற மாணவர் ஆசிஃப் அவர்களுக்கு விழா மேடையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெங்கல பதக்கம் வழங்கினார். மாணவர் ஆசிஃப் அவர்கள் சுமார் ஆறு மாத கால பயிற்சியில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றதை திருப்பூர் டிஜே பாக்சிங் கிளப் பயிற்சியாளர்கள், உடன் பயிலும் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக