திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா, பிராஞ்சேரி பஞ்சாயத்து மேட்டு பிராஞ்சேரி கிராமம் கிராமத்தை சார்ந்த விவசாயி செல்லப்பா என்பவரின் ஆடு கல்குவாரி செல்லும் ஒயர் மின்னழுத்த வயர் அருந்து கீழே விழுந்து அதனை மிதித்த ஆடு சம்பவ இடத்தில் பலியானது
இது குறித்து விவசாயி செல்லப்பா உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் மற்றும் மின்சார வாரியத்திற்கும் தகவல் கொடுத்தார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றார்கள் .
ஊர் பொதுமக்கள் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் அதிகப்படியான மின்னழுத்த வயர் தனியார் கல்குவாரிக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கின்றது அவசர அவசரமாக வேலை செய்யப்பட்டுள்ளது முறையாக மின்வாரியம் ஆய்வு செய்யவில்லை இதே இடத்தில் ஆடு மேய்ப்பவர் மிதித்திருந்தால் பலியாகி இருப்பார் எனவே முறையாக அந்த கல் குவாரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அனைத்து மின்கம்பங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றார்கள்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக