உலக காச நோய் தினத்தையொட்டி நாகர்கோவில் சுங்கான்கடை கிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காச நோய் ஒழிப்புத்துறை இணை இயக்குனரும், மாவட்ட காசநோய் அதிகாரியுமான டாக்டர் சுபைர் ஹசன் முகமது கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கிம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரும் துணை மருத்துவ கண்காணிப்பாளருமான டாக்டர் நிஷாந்த், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வரவேற்று பேசினார். நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர். ரமேஷ் வாழ்த்துரை நிகழ்த்தினார். காச நோய் தடுப்பு குறித்து நடைபெற்ற சிறப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர்,
அனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக